நகராட்சி துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்;

Update: 2025-08-24 07:31 GMT
உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு நகராட்சி துாய்மை பணியாளர்கள், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு., சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.நகராட்சி துாய்மை பணியாளர்கள் சார்பில் ஜெயராமன் தலைமை தாங்கினார். துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். துாய்மை பணிகளை தனியாருக்கு விடுவதை கைவிட வேண்டும். அரசு அறிவித்த ஊதியத்தை முழுமையாக பிரதி மாதம் 5ம் தேதிக்குள் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Similar News