நீலகிரி மாவட்டம், உதகை, வண்டி சோலை,லட்சுமி நாராயணபுரம் பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வழிபாட்டில் இருந்த ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் கடந்த 18 -8 -2025 அன்று கோயில் முழுவதும் சேதம் அடைந்தது , அந்தப் பகுதியில் மாற்று மதத்தை சேர்ந்த மூன்று பேர் தொடர்ந்து கோயிலை அப்புறம் படுத்திய தீருவோம் என கூறிவந்துள்ளனர், இந்த நிலையில் மரம் விழுந்த மறுநாள் சிலையும் சேதம் செய்யப்பட்டுள்ளது, மேலும் அந்த மூன்று பேர் சேதமடைந்த கோயிலை புனரமைக்க விடாமல் மிரட்டி வந்துள்ளனர், கோயில் மற்றும் சிலை சேதம் அடைவதற்கும், இந்த மூன்று பேர் தான் காரணம் என சந்தேகத்திற்கு இடமில்லாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்ததன் பேரில், உதகை நகர் இந்து முன்னணி சார்பில் இன்று கோயிலை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி உதகை மத்திய காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது