மருத்துவ முகாமை நீலகிரி மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ ஆய்வு
திரளான மக்கள் பங்கேற்பு;
நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாமை நீலகிரி மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ ஆய்வு நீலகிரி மாவட்டம், கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வரும் "நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாமை, நீலகிரி மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் கழக நிர்வாகிகளுடன் சென்று ஆய்வு செய்தார். உடன் மாவட்ட அவை தலைவர் போஜன், மேலூர் ஒன்றிய செயலாளர் லாரன்ஸ், பேரூராட்சி செயலாளர்கள் சுந்தர்ராஜ், முத்து, பேரூராட்சி தலைவர்கள் ஹேமாமாலினி, பேபி உட்பட கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.