நியாய விலைக் கடையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாததால் மக்கள் அவதி.

நியாய விலைக் கடையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாததால் மக்கள் அவதி.;

Update: 2025-08-26 07:25 GMT
நியாய விலைக் கடையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படாமல் மக்கள் அவதி. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள மொறப்பாக்கம் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மொறப்பாக்கம், கருணாகர வளாகம், கூடலூர், தண்டரை பேட்டை,பெரும்பாக்கம், தண்டலம், புதூர் என 9 நியாய விலை கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைக்கு 5 விற்பனையாளர்கள் இருந்தனர்.ஆனால் தற்பொழுது ஒரே ஒரு விற்பனைகளை மட்டும் பணியில் உள்ளார். ஏற்கனவே இருந்த 5 பேரில் இருந்து 3 பேராக குறைந்திருந்த நிலையில் இதில் இருவர் ஒருவர் பதவி உயர்வு காரணமாகவும் மற்றொருவர் பணி ஓய்வு பெற்ற காரணத்தால் சென்று விட்டதால் தற்போது ஒரே ஒரு விற்பனை மட்டும் இருப்பதால் இப்பகுதியில் உள்ள ஒன்பது கடைகளுக்கும் விற்பனையாளர் சரியாக ரேஷன் பொருள் வழங்க செல்லாததால் இந்த மாத ரேஷன் பொருட்கள் 20 நாட்கள் மேலாகியும் இதுவரை மக்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்படவில்லை.இம்மாதம் முடிவு நாள் முடியும் தருவாயில் உள்ளதால் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் நியாய விலை கடைகளிலேயே தேங்கியுள்ளது.அது புதிய விற்பனையாளர்களை நியமனம் செய்து முறையாக ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதற்கு முழு காரணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயலாளராக பணிபுரியும் செயலாளரின் மெத்தன போக்கே காரணம் என இப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

Similar News