இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு
இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு;
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த போந்தவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சர்மன், 29; கிறித்துவ மதபோதகர். இவருக்கு திருமணமாகி, ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம், சொந்த வேலையாக செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கத்திற்கு சென்ற சர்மன், 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில் வீடு திரும்பினார். இரவு 8:40 மணியளவில், சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீ பெரும்புதுார் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது, சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஆப்பூர் அருகே, பின்னால் வேகமாக வந்த 'மாருதி எர்ட்டிகா' கார், இவரது ஸ்கூட்டரில் மோதியது.இதில், சர்மன் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். சக வாகன ஓட்டிகள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து, பாலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.