அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு
அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு;
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில், கருநிலம் கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், 150-க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர்.இப்பள்ளியில் போதிய வகுப்பறை வசதி இல்லாமல், மாணவ - மாணவியர் அவதியடைந்து வந்தனர். இதையடுத்து, மறைமலை நகர் சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் வால்வோ மற்றும் ஆனந்த் நிறுவனம் இணைந்து, 40 லட்சம் மதிப்பீட்டில், புதிதாக மூன்று வகுப்பறை கட்டடங்கள் கட்டிக் கொடுத்தன. அதன் திறப்பு விழா நடந்தது.இந்த புதிய கட்டடங்களை, செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி திறந்து வைத்தார்.