காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர்
காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர்;
மாநிலம் முழுவதும் நகரப் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவியர்கள் பயன்பெறும் வகையில் தமிழக "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சென்னையில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் கண்டோன்மெண்ட் ஆரம்ப பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு காலை உணவு பறிமாறிய பின் மாணவயர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.