காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்திய எம்எல்ஏ

காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்திய எம்எல்ஏ;

Update: 2025-08-26 15:35 GMT
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 3.5 லட்சம் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்ததை தொடர்ந்து செங்கல்பட்டு புனித மரியன்னை தொடக்கப்பள்ளியில் தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் குழந்தைகளுடன் உணவருந்தி தொடக்கி வைத்தார். இந்த விழாவில் செங்கல்பட்டு நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், நகர்மன்ற துணைத்தலைவர் அன்புசெல்வன், நகராட்சி ஆணையர் ஆண்டவன், நகர்மன்ற உறுப்பினர்கள்,பள்ளி தலைமை ஆசிரியர்,அரசு அதிகாரிகள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்துக்கொண்டனர்.

Similar News