வாலாஜாவில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக புகார்
வாலாஜாவில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக புகார்;
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா மடபதி தெருவில் சில மாதங்களுக்கு முன்பு கழிவு நீர் கால்வாய் பணிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கழிவு நீர் கால்வாயில் குடிநீர் குழாய் பைப் செல்கிறது, இதனால் குடிநீர் பைப்பு மேல் பகுதியில் கழிவு நீர் செல்வதால் குடிநீரில் கழிவு நீர் கலப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். குடிநீரில் கழிவு நீர் வாசனை வருவதாகவும் இதனால் தொற்று நோய்கள் வர வாய்ப்புள்ளதாகவும் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.