உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை துவக்கி வைத்த எம் எல் ஏ

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை துவக்கி வைத்த எம் எல் ஏ;

Update: 2025-08-27 10:10 GMT
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட செட்டிபுண்ணியம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் துவக்கி வைத்து முகாமினை பார்வையிட்டார். இம்முகாமில் 15 துறைகள் சார்பில் 46 சேவைகளுக்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு கலைஞர் உரிமைத்தொகை,பட்டா,குடும்ப அட்டை,மின் இணைப்பு,ஆதார் கார்டு, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் அளித்தனர். அதனைத்தொடர்ந்து,மின் இணைப்பு பெயர் மாற்றம் சான்று,பட்டா, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகம், முதியோருக்கு மருத்துவ பெட்டகங்கள் உள்ளிட்டவற்றை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம்,காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் VDS.சதீஷ், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் M.K.மணி,ஒன்றிய கவுன்சிலர் ஷீலா தணிகாசலம்,ஊராட்சி மன்ற தலைவர்,துணைத்தலைவர்,துறைச்சார்ந்த அதிகாரிகள் ,ஊழியர்கள், கழக நிர்வாகிகள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

Similar News