புதிய நியாய விலை கடை கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி
பாளையூர் கிராமத்தில் ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம் பங்கேற்பு!;
பாளையூர் கிராமத்தில் ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம் பங்கேற்பு! செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தார்காடு ஊராட்சி பாளையூர் கிராமத்தில் செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றிய கழகச் செயலாளர் சிற்றரசு தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு ஆகியோர் கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்களை பொது மக்களுக்கு வழங்கி விநியோகத்தை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.