மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-08-29 11:49 GMT
நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு இயல்பு மழை அளவு 716.54 மி.மீ. தற்போது வரை (26.08.2025) 379.29 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் முடிய இயல்பு மழையளவை விட 55.78 மி.மீ. அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டில் ஜீலை 2025 மாதம் வரை நெல் 642 எக்டர், சிறுதானியங்கள் 23484 எக்டர் பயறு வகைகள் 4217 எக்டர், எண்ணெய் வித்துக்கள் 19963 எக்டர், பருத்தி 486 எக்டர் மற்றும் கரும்பு 4398 எக்டர் என மொத்தம் 53190 எக்டரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலைப் பயிர்களில் தக்காளி 324 எக்டர், கத்திரி 144 எக்டர், வெண்டை135 எக்டர், மிளகாய் 58 எக்டர், மரவள்ளி 302 எக்டர், வெங்காயம் 1526 எக்டர், மஞ்சள் 1906 எக்டர் மற்றும் வாழை 1756 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள் மற்றும் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டத்தில் காரிப் பருவத்திற்கான டிஜிட்டல் பயிர் கணக்கீட்டுப் பணி நடைபெற்று வருகிறது. வேளாண்மைத் துறை வழிகாட்டுதலின்படி தன்னார்வலர்கள் இப்பணியினை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயிகள் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேளாண்மை இணை இயக்குநர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நாமக்கல் மாவட்டத்தில் மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டியில் கரும்பு பயிருக்காக பள்ளிபாளையம் வட்டாரம், சமயசங்கிலி கிரமத்தைச் சேர்ந்த விவசாயி இராஜாமணி அவர்கள் 2 ஆம் பரிசு பெற்றமைக்கு ரூ.1.50 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். மேலும், விவசாயிகளுக்கு தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் வேளாண் இடுபொருட்கள், வேளாண்மைத் துறையின் உழவர்களுக்கான உன்னதத் திட்ட கையேடு மற்றும் பூச்சிநோய் விழிப்புணர்வு நாட்காட்டி ஆகியவற்றினை விவசாயிகளுக்கு வழங்கினார்.மேலும், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் விவசாய பெருமக்கள் 150-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர்.ரெ.சுமன், சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் / செயலாட்சியர் (மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை) இரா.குப்புசாமி, மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ் திருச்செங்கோடு சார் ஆட்சியர் அங்கித்குமார் ஜெயின் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் சாந்தி, வேளாண்மை இணை இயக்குநர் சு.மல்லிகா, தோட்டக்கலைத் துணை இயக்குநர் மா.புவனேஷ்வரி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் எஸ்.பத்மாவதி, வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம்) நாசர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) க.இராமச்சந்திரன் மற்றும் இதர துறை அலுவலர்கள் மற்றும் விசாயிகள் கலந்து கொண்டனர்.

Similar News