பக்கிள் ஓடையில் மதுபோதையில் தவறி விழுந்த வாலிபர் மீட்பு

தூத்துக்குடி பக்கிள் ஓடையில் மதுபோதையில் தவறி விழுந்த வாலிபர் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.;

Update: 2025-08-30 07:40 GMT
தூத்துக்குடி பக்கிள் ஓடையில் மதுபோதையில் தவறி விழுந்த வாலிபர் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில், பக்கிள் ஓடை அமைந்து உள்ளது. இந்த ஓடை மாநகரில் தேங்கும் மழைநீர் மற்றும் கழிவுநீர் ஒடைய வழியாக கடலில் சென்று கலக்கிறது. இந்த ஓடை சீரமைக்கப்பட்டு சிமெண்டு தளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் கடந்த மழைக்காலங்களில் பக்கிள் ஓடை சிறந்த வடிகாலாக விளங்கியது. இதனால் மழைநீர் கடலுக்கு நேரடியாக சென்றது. மழைக்காலத்துக்கு முன்பாக பக்கிள் ஓடையில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி இரண்டாம் கேட் பக்கிள் ஓடையில், ஒருவர் தவறி விழுந்து கிடைப்பதாக மாவட்ட தீயணைப்பு ஆலுவலகத்திற்கு நிடைத்த தகவலின் அடிப்படையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய உதவி மாவட்ட அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்து அங்கு கிடந்த வாலிபரை மீட்டனர். தொடர்ந்து, விசாரணையில் அவர் தூத்துக்குடி சுந்தரராமபுரத்தைச் சேர்ந்த ஜெகன் (23) என்பதும் மதுபோதையில் அவர் ஓடைக்குள் தவறிவிழந்ததும் தெரியவந்தது. தண்ணீர் இல்லாத பகுதியில் விழந்ததால் அவர் மயக்கமடைந்து விழந்து கிடந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனால் அப்புகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Similar News