விபத்தில் காயமடைந்த தூய்மை பணியாளர்களுக்கு நிதி உதவி செய்த எம்எல்ஏ

விபத்தில் காயமடைந்த தூய்மை பணியாளர்களுக்கு நிதி உதவி செய்த எம்எல்ஏ;

Update: 2025-08-30 16:39 GMT
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் பணியின்போது விபத்துக்குள்ளாகி நகராட்சியை சார்ந்த 4 பேர் சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து உதவித்தொகை வழங்கினார்.அதனைத் தொடர்ந்து விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு முறையான சிகிச்சை மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் உரிய நிவாரணமும் வழங்கபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வின் போது மதுராந்தகம் நகர் கழக செயலாளர் KC.சரவணன், நகர மன்ற உறுப்பினர்கள், நகர கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News