பணியாளர்களுக்கான அடிப்படை பயிற்சி துவக்கம்
பணியாளர்களுக்கான அடிப்படை பயிற்சி துவக்கம்;
செங்கல்பட்டு மாவட்டம்,காட்டாங்குளத்தூர் ஒன்றியம் , வண்டலூரில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள பணியாளர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்புகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சயில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம்,செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் கார்த்திகேயன், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் நிருவாக இயக்குநர் கே.விவேகானந்தன்,புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் ஹனிஷ் சாப்ரா,சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய்,நகராட்சி நிர்வாக இயக்குநர் பி. மதுசூதனன் ரெட்டி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன்,பேரூராட்சிகளின் இயக்குநர் எம்.பிரதீப் குமார், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தி. சினேகா, மற்றும் நகராட்சி துறை உயர் அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.