திமுக மேயருக்கு அதிமுக கவுன்சிலர் சால்வை அணிவித்து நன்றி

தூத்துக்குடி மாநகராட்சி திமுக மேயருக்கு அதிமுக கவுன்சிலர் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.;

Update: 2025-08-31 07:19 GMT
தூத்துக்குடி மாநகராட்சி 10வது வார்டு பகுதியில் புதிய தார் சாலை அமைத்துக் கொடுத்த மாநகராட்சி ஜெகன் பெரியசாமி க்கு 10வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் பத்மா செண்பக செல்வன் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். அப்போது தாங்கள் பகுதியில் நீண்ட காலமாக சாலை வசதி இல்லாமல் இருந்த பகுதிக்கு சாலை வசதி செய்து கொடுத்த மேயர் ஜெகன் பெரியசாமிக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் தெரிவித்தார்.

Similar News