தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரின் நினைவு நாளை முன்னிட்டு அன்னதானம்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரின் நினைவு நாளை முன்னிட்டு அன்னதானம்;
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர், மறைந்த மூப்பனாரின், 24-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தாம்பரம் சட்டசபை தொகுதி முழுதும், நேற்று மூப்பனார் உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மலர் அஞ்சலி செலுத்தினர்.தாம்பரம் பேருந்து நிலையத்தில், 3,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வேணுகோபால் பங்கேற்று, அன்னதானம் வழங்கினார். இதில், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு நிர்வாகி மூர்த்தி, தாம்பரம் மாநகராட்சி, 60வது வார்டு கவுன்சிலர் கீதா வேணுகோபால், கட்சியின் நிர்வாகிகள் பொன்ராஜ், வேல்மயில், வெங்கடபெருமாள், கந்தசாமி, உமாபதி, லட்சுமிபதி, பிரவீன், ஜோசப்ராஜ், சஞ்சீவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்