பொத்தேரி ரயில் நிலையத்தில் கூரை அமைக்க வேண்டுமென, பயணியர் வேண்டுகோள்

பொத்தேரி ரயில் நிலையத்தில் கூடுதலாக இருக்கைகள் மற்றும் கூரை அமைக்க வேண்டுமென, பயணியர் வேண்டுகோள்;

Update: 2025-08-31 13:09 GMT
செங்கல்பட்டு -- சென்னை கடற்கரை தடத்தில் தினமும், 60 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 60 விரைவு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த தடத்தில் உள்ள பொத்தேரி ரயில் நிலையத்தை, சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த ரயில் நிலையத்தில் போதிய இருக்கைகள் மற்றும் கூரை இல்லாததால், பயணியர் வெயில் மற்றும் மழையில் அவதிப்பட்டு வருகின்றனர்.இது குறித்து, ரயில் பயணியர் கூறியதாவது: காலை மற்றும் மாலை நேரங்களில், பொத்தேரி ரயில் நிலையத்தில் அதிக அளவில் கூட்டம் இருக்கும். குறிப்பாக பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் அதிக அளவில் வருகின்றனர். தென் மாவட்டங்களில் இருந்து பேருந்துகளில் வரும் பயணியர், சென்னைக்குள் பயணிக்க இங்கு இறங்கி ரயிலில் செல்கின்றனர். இந்த ரயில் நிலையத்தில், மூன்று நடைமேடைகள் உள்ளன. ஆனால் இருக்கைகள் போதிய அளவு இல்லை அத்துடன், நிழற்கூரை இல்லாததால் மழை நேரத்தில் சிரமமாக உள்ளது. இதனால் பெண்கள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அதிகமானோர் பயன்படுத்தும் பொத்தேரி ரயில் நிலையத்தில் கூடுதலாக இருக்கைகள் மற்றும் கூரைகள் அமைக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News