காரை மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் திடீர் ஆய்வு செய்த ஆட்சியர்

காலை உணவு திட்டத்தைப் பற்றி மாணவர்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்;

Update: 2025-09-02 16:45 GMT
பெரம்பலூர் மாவட்டம் காரை அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் காரை மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காரை அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் காரை மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி இன்று (02.09.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காரை அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாணவ மாணவிகளிடம் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் இன்று என்ன உணவு வழங்கப்பட்டது என்றும், உணவின் சுவை தரம் குறித்தும் மாணவ மாணவிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், 3ஆம் வகுப்பு மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்குச்சென்ற மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாணவ மாணவிகளிடம் புத்தகங்களை வாசிக்கச்சொல்லி மாணவர்களின் கற்றல் மற்றம் வாசிப்புத்திறன் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வுசெய்தார். முன்னதாக காரை மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு மையத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பால் உற்பத்தியாளர்களுக்கு பாலுக்கான தொகை முழுமையாக வழங்கப்படுகின்றதா என்றும், பாலின் தரம் முறையாக ஆய்வு செய்யப்படுகின்றதாக எனவும் கேட்டறிந்தார். பின்னர் பால் உற்பத்தியாளர்களுக்கு பாலுக்கான தொகையினை விரைந்து பெற்று வழங்கிட கூட்டுறவு சங்க செயலாளருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். இந்நிகழ்வுகளில் காரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News