அனைத்து துறை அலுவலர்களுக்கு பயிற்சி

பயிற்சி;

Update: 2025-09-03 04:04 GMT
கள்ளக்குறிச்சி மாவட்ட பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆதி கர்மயோகி அபியான் திட்டத்தின் கீழ் பழங்குடியினர் மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் கொண்டு செல்லும் வகையில், அனைத்து துறை அலுவலர்களுக்கு மாவட்ட அளவிலான 3 நாள் பயிற்சி நேற்று துவங்கியது. பயிற்சியை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார். இதில் பழங்குடியினர் மக்களுக்கு வீடு வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக வழங்கிடும் வகையில் அனைத்து துறை அலுவலர்கள் செயல்பட வேண்டும். அனைத்து துறைகள் மூலம் செயல்படுதப்படும் திட்டங்கள் முழுமையான அளவிலும், விரைவாகவும் பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கொண்டு சேர்க்க வட்டார அளவிலான அனைத்து துறை அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். மத்திய அரசின் சார்பில் பழங்குடியின மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பயிற்சினை முழுமையாக பெற்று அரசின் நலத்திட்டங்களை பழங்குடியின மக்களுக்கு சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. துவக்க நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., ஜீவா, பழங்குடினர் நல அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Similar News