தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!
கடைகளில் திடீர் சோதனை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!;
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி புதூர் ஊராட்சி ஒன்றியம், நாகலாபுரம் கிராம ஊராட்சியில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளதா என்பது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜன், தினகரன், தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர் கண்ணன், ஊராட்சி செயலர் காமராஜ் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கடைகளில் பயன்படுத்தப்பட்டு வந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஐந்து கடைகளுக்கு ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த வலியுறுத்தப்பட்டது. இதில் தூய்மை காவலர்கள் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.