ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மன் மீது சூரிய ஒளி பக்தர்கள் தரிசனம்...

ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மன் மீது சூரிய ஒளி பக்தர்கள் தரிசனம்...;

Update: 2025-09-04 14:46 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் முக்கிய விசேஷ தினங்களில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி வியாழக்கிழமை கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றது. அப்போது ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் மீது சூரிய ஒளி பிரகாசமாக வீசியது இதனைப் பார்த்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் மற்றும் சூரிய பகவானை வணங்கிச் சென்றனர்.

Similar News