வ.உ.சிக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி 154வது பிறந்த தினம்;
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 154வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு பொருட்காட்சி திடலில் அமைந்துள்ள வ.உ.சி மணிமண்டபத்தில் அன்னாரது திருவுருவ சிலைக்கு தமிழக அரசின் சார்பில் சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் சுகுமார், திருநெல்வேலி எம்பி ராபர்ட் புரூஸ், பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் அதிகாரிகள்,திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.