அவனியாபுரத்தில் அன்னதானம் விழா
மதுரை அவனியாபுரம் மாரியம்மன் கோவிலில் அன்னதானம் விழா நடைபெற்றது;
மதுரை அருகே அவனியாபுரம் மேலத்தெரு, கணக்கப் பிள்ளை தெரு, கோடாங்கி சந்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 114வது ஆண்டு விழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது . கடந்த செவ்வாய் கிழமை முதல் நடைபெற்ற விழாவில் நேற்று முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது .இன்று (செப்.5) மதியம் 2000க்கு மேற்ப்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மாலை திருவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அப் பகுதி நான்கு சமுதாய மக்கள் சிறப்பாக செய்திருந்தனர் .