ஆசிரியர் தின விழா ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

கொண்டார்கள்.மாணவச் செல்வங்களின் கவிதை ,நடனம் ,நாடகம், ஆசிரிய பெருமக்களின் பெருமை குறித்த ஒளிப்படம் ஆகிய பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.;

Update: 2025-09-05 16:14 GMT
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் சேர்மன் டாக்டர் . A. ராம்குமார் தலைமை வகித்தார்கள். துணை சேர்மன் மோகனசுந்தரம் முன்னிலை வகித்தார்கள். சாரதா மேம், சந்திரோதயம் மேம் வித்யா மேம் ஆகிய முப்பெரும் முதல்வர் பெருமக்களும், மேல்நிலை வகுப்பு இயக்குனர் .டாக்டர். கார்த்திக் துணை முதல்வர் ராஜேந்திரன் அவர்களும் ஒருங்கிணைப்பாளர் ஹனிபா சார் உள்ளிட்ட ஆசிரி பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.மாணவச் செல்வங்களின் கவிதை ,நடனம் ,நாடகம், ஆசிரிய பெருமக்களின் பெருமை குறித்த ஒளிப்படம் ஆகிய பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.ஆசிரியப் பெருமக்களுக்கான பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டது. விழாவில் பள்ளியின் சேர்மன் அவர்கள் தலைமை உரை ஆற்றினார்கள் .முதல்வர் ,துணை முதல்வர், மேல்நிலைப்பள்ளி இயக்குனர், ஒருங்கிணைப்பாளர், மற்றும் ஆசிரியப் பெருமக்களும் உரையாற்றினார்கள் . நிகழ்ச்சியின் நிறைவாக பள்ளியின் சேர்மன் அவர்களும் துணை சேர்மன் அவர்களும் ஆசிரியப் பெருமக்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்கள்.

Similar News