காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட அனைத்து வகையான கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் சங்கம் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்;
பெரம்பலூர் நகர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட அனைத்து வகையான கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் சங்கம் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பெரம்பலூர் மாவட்ட அனைத்து வகையான கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் சங்கம் சி ஐ டி யு சார்பில் எதிர் மனுதாரர்களுக்கு சாதகமாக செயல்படும் நடவடிக்கையை கைவிட வேண்டும், புகார் மனுக்களை பல மாதங்களாக கிடப்பில் போடுவதை தவிர்க வேண்டும், பெரம்பலூர் நகர் மற்றும் மாவட்ட சுற்றுப்பகுதியில் நடக்கும் தொடர் திருட்டை தடுத்திட வேண்டும், ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும், ஆவணங்களையும், ஆதாரங்களையும் வழங்கியும் பாரபட்சமாக செயல்படும் நடவடிக்கையை கைவிட வேண்டும், மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த புகார் மனுக்களை உதாசினப்படுத்துவதை கைவிட வேண்டும், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பெரம்பலூர் மாவட்ட காவல்துறைக்கு வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, சி டிவி மாவட்ட தலைவர அகஸ்டின் தலைமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அகஸ்டின் உள்ளிட்ட, பெரம்பலூர் மாவட்ட அனைத்து வகையான கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.