புனித லசால் பள்ளியில் ஆசிரியர் தின விழா
தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப் பள்ளியில் சேவா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.;
தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப் பள்ளியில் சேவா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் அருட்சகோ. ஜான் பாலுக்கு சேவா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. நல அறக்கட்டளை நிறுவனர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்ற செயலாளர் காமாட்சி முருகன் வரவேற்று பேசினார். விழாவிற்கு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முருகன் தலைமை தாங்கினார். மின்வாரியத் துறை ஜேஇ டேவிட் சாலமன் அலெக்சாண்டர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கவிஞர் நெடுஞ்சாலை செல்வராஜ் ஆசிரியர் தின வாழ்த்து கவிதை வாசித்தார். அருட்சகோ. ஜான்பால் ஏற்புரை வழங்கினார். நிறைவாக அருட்சகோ சேகர் நன்றி கூறினார்.