போலீசாரின் இரு சக்கர வாகன பேரணி
மதுரையில் காவலர் தினத்தை முன்னிட்டு போலீசாரின் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.;
தமிழகம் முழுவதும் காவலர் தினம் இன்று (செப்.6)கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, மதுரையில் மாநகர காவல் துறையினர் சார்பில் மேல மாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்பில் இருந்து இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. காவல் ஆணையர் லோகநாதன் இந்தப் பேரணியைத் தொடங்கி வைத்தார். நான்கு மாசி வீதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்வில், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.