கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் – பரபரப்பு !
பத்து நாளில் நான்காவது முறையாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.;
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று நான்காவது முறையாக இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விடுமுறை நாளாக இருந்ததால் சில ஊழியர்கள் மட்டுமே பணியாற்றி வந்தனர். அப்போது வந்த மிரட்டல் தகவல் அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது. பின்னர், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் அலுவலக வளாகம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. சோதனையில் எதுவும் கண்டுபிடிக்கப்படாமல், இது புரளி மிரட்டலாகவே தெரியவந்தது. கடந்த பத்து நாட்களில் நான்காவது முறையாக இத்தகைய மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வெளிநாட்டில் இருந்து மர்ம நபர் இ-மெயில் அனுப்பியதாக விசாரணையில் வெளிவந்துள்ளது.