கோவையில் மீலாது நபி ஊர்வலம் !

மத நல்லிணக்கத்தை போற்றிய சிறுவர் ஊர்வலம்.;

Update: 2025-09-06 06:15 GMT
கோவை கோட்டைமேடு பகுதியில் மீலாது நபி ஊர்வலம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. சமூக ஒற்றுமை, சகோதரத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுவர், சிறுமியர் பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மனித உரிமை பிரிவு சார்பில் பங்கேற்றவர்கள், குழந்தைகளுக்கு பிஸ்கட், குளிர்பானம், இனிப்புகளை வழங்கினர். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, சமூக நல்லுறவை வளர்க்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறான ஊர்வலங்களில் பங்கேற்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

Similar News