கோவையில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. பிறந்த நாள் விழா !

கோவையில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. 154-வது ஜெயந்தி விழா அனுசரிப்பு.;

Update: 2025-09-06 06:27 GMT
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 154-வது பிறந்த நாள் விழா கோவையில் நேற்று கொண்டாடப்பட்டது. வ.உ.சி. மைதானத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு, மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் கோவை மத்திய சிறைச்சாலை அருகே வ.உ.சி.யின் திருவுருவப்படத்திற்கும் பல்வேறு கட்சிகள், சமூக அமைப்பினரும் மலர் அஞ்சலி செலுத்தினர்.

Similar News