தஞ்சாவூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினராக புனல் ரவி  நியமனம்

நியமனம்;

Update: 2025-09-06 13:26 GMT
தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், மாவட்ட அளவிலான மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், மாவட்டம் தோறும் செயல்பட்டு  வருகின்றது.  தஞ்சாவூர் மாவட்டத்தில், தற்போது திருத்தி அமைக்கப்பட்ட புதிய குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அக்குழுவில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்த பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகத்தின் தலைவர் டாக்டர் டி.புனல்ரவி, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினராக, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இரவிச்சந்திரன் பரிந்துரையின் படி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் நியமித்துள்ளார். இவர் தொழிலாளர் துறையின் சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில்  செயல்படக்கூடிய,  மாவட்ட கொத்தடிமை தொழிலாளர் கண்காணிப்புக்குழு உறுப்பினராகவும், பட்டுக்கோட்டை கோட்டாட்சித் தலைவர் தலைமையில் செயல்படக்கூடிய, உட்கோட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகின்றார்.

Similar News