கோவை: காவலர் தின விழாவில் ஹெல்மெட், சீட்பெல்ட் அணிந்தவர்களுக்கு மரக்கன்று வழங்கினர் !
பேரூரில் நடைபெற்ற காவலர் தின நிகழ்ச்சியில் பொதுமக்கள் உற்சாகம்.;
பேரூர் அருகே ஆலாந்துறை போலீஸ் நிலையத்தில் காவலர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இன்ஸ்பெக்டர் சமுத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணிந்து வந்தவர்களை பாராட்டி மரக்கன்றுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் மலைக்கனி, தேவராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சின்னராஜ், நிலைய அலுவலர் அஜித், காவலர்கள் மற்றும் தனிப்பிரிவு போலீசார் கலந்து கொண்டனர்.