அருணகிரி சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம்
மதுரை அவனியாபுரம் பகுதியில் உள்ள அருணகிரி சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.;
மதுரை அவனியாபுரம் பிள்ளையார் பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு அருணகிரி சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் மற்றும் 70 வது ஆண்டு குருபூஜை விழா இன்று (செப்.7) காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் மேளதாளத்துடன் புனித நீர் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.