செங்கோட்டையனுக்கு ஆதரவாக பரபரப்பு போஸ்டர்கள்
மதுரை திருமங்கலத்தில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன;
மதுரை திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ஒன்று இணைவோம்! வெற்றி பெறுவோம் !அண்ணா திமுக கடைகோடி தொண்டர்களில் உள்ள குமுறல்களை வெளிப்படுத்திய கழகத்தின் உண்மை விசுவாசி செங்கோட்டையன் அவர்களின் கருத்தை வலுப்படுத்துவோம்! பத்து நாள் கெடுவுக்குள் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே தானே முன்நின்று தலைவர்கள் உருவாக்கிய கட்சியையும் தொண்டர்களையும் காப்பாற்ற வேண்டும் இதுவே உங்களுக்கு கடைக்கோடி தொண்டர்களின் கடைசி அழைப்பு என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.