உசிலம்பட்டியில் நர்சிங் மாணவி மாயம்
மதுரை உசிலம்பட்டியில் நர்சிங் மாணவி மாயமான புகார் அளிக்கப்பட்டுள்ளது.;
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கிராமத்தில் வசிக்கும் ஜெயபாண்டியின் 18 வயது மகள் உசிலம்பட்டியில் உள்ள அன்னை டிப்ளமோ நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் (செப் .5) காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் இவரது தாயார் நேற்று (செப்.6)உத்தப்ப நாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்