கோவை மாவட்டத்தில் காவலர் தினம் கொண்டாட்டம் !

காவலர் தினத்தை ஒட்டி வீர காவலர்களுக்கு மரியாதை,சமூகநல நிகழ்ச்சிகள், போட்டிகள், கண்காட்சிகள் நடத்தப்பட்டது.;

Update: 2025-09-07 10:27 GMT
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தலைமையில் காவலர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வீர காவலர்களுக்கு மரியாதை செலுத்திய அவர், “அவர்களின் தியாகம் எப்போதும் வழிகாட்டும் விளக்காக இருக்கும்” என்றார். மாவட்டம் முழுவதும் ரத்த தானம், கண்காட்சிகள், மாணவர்களுக்கு போட்டிகள், மரக்கன்று வழங்குதல், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

Similar News