திரையரங்கில் கெட்டுப்போன சிப்ஸ் விற்பனை – ரசிகர்கள் அதிருப்தி!

திரையரங்க ஸ்டாலில் தரமற்ற உணவு – உணவு பாதுகாப்புத் துறை கவனிக்குமா?;

Update: 2025-09-07 13:52 GMT
கோவை போத்தனூர் பகுதியில் உள்ள அரசன் திரையரங்கில் மதராசி திரைப்பட காட்சி இடைவேளையில், அங்குள்ள ஸ்டாலில் விற்கப்பட்ட வீல் சிப்ஸில் சிக்கு வாசனை வந்ததாக ரசிகர்கள் குற்றம் சாட்டினர். இதனால் ரசிகர்கள் – ஊழியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திரையரங்குகளில் அதிக விலையில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் தரமற்றவையாக இருப்பது குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். உணவு பாதுகாப்பு துறை ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

Similar News