கிணத்துக்கடவில் தக்காளிக்கு பந்தல் கட்டும் பணிகள் தீவிரம் !
கிணத்துக்கடவு விவசாயிகள் தக்காளி பந்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.;
கிணத்துக்கடவு சுற்றுவட்டாரங்களில் தக்காளி சாகுபடி பரவலாக நடைபெற்று வருகிறது. சிவம், சாகோ, மதன் உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன. சிங்கையன்புதூர், சொக்கனூர், வடபுதூர்–நெகமம் சாலையோர பகுதிகளில் தக்காளி செடிகளுக்கு பந்தல் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விவசாயி கோபால் , இது குறித்து 3 ஏக்கரில் தக்காளி நடவு செய்துள்ளோம். தற்போது பந்தல் கயிறு கட்டும் பணிகள் நடைபெறுகிறது. இன்னும் 20–25 நாட்களில் பறிப்பு தொடங்கும். டிசம்பர் மாத இறுதி வரை பறிப்பு இருக்கும். ஒரு ஏக்கருக்கு 2 லட்சம் செலவு ஆகிறது. அதேசமயம், 3,000–3,500 பெட்டிகள் வரத்து கிடைக்கும் என்றார்.