குமரி மாவட்டம் குளச்சல் கடற்கரையில் தினமும் மாலை வேளையில் சூரியன் மறையும் காட்சியை கண்டு களிக்க ஏராளமான பொதுமக்கள் பெரும் அளவில் கூடுவது வழக்கம். நேற்று விடுமுறை மற்றும் ஓணம் பண்டிகை விடுமுறையானதால் ஏராளம் பொதுமக்கள் குளச்சல் கடற்கரைக்கு மாலையில் வந்து குவிந்தனர். குடும்பத்துடன் மணற்பரப்பில் அமர்ந்து உரையாடினர். அதே நேரம் நேற்று அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் கடலுக்குள் சென்று கால் நனைக்க யாரையும் அனுமதிக்கவில்லை. கடற்கரை பரப்பில் அமர்ந்து கடல் அழகை ரசித்து சென்றனர்.