திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று (செப்டம்பர் 8) முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் அரசு அலுவலர்களுக்கான கேரம் விளையாட்டு போட்டி நடைபெற்ற பொழுது மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா பங்கேற்றார். இந்த விளையாட்டு போட்டிகளில் ஏராளமான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.