திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரயில் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் 16 பெட்டிகளுடன் இயங்கிய வந்தே பாரத் ரயில் 20 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெட்டிகள் அதிகரிக்கப்பட்ட புதிய வந்தே பாரத் ரயில் இன்று (செப்டம்பர் 8) நெல்லை ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.