திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வெப்பத்தினால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 8) மாலை முதல் வானிலை மந்தகமாக காணப்பட்ட நிலையில் நெல்லை மாநகர பகுதி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.இதனால் பொதுமக்கள் வெப்பம் தணிந்து குளிர்ச்சி அடைந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.