விருதுநகரில் கண்தான விழிப்புணர்வு பேரணி, நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடியசைத்து தொடங்கி வ வைத்தார் ....*

விருதுநகரில் கண்தான விழிப்புணர்வு பேரணி, நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடியசைத்து தொடங்கி வ வைத்தார் ....*;

Update: 2025-09-08 15:55 GMT
விருதுநகரில் கண்தான விழிப்புணர்வு பேரணி, நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடியசைத்து தொடங்கி வ வைத்தார் .... விருதுநகரில் கிருஷ்ணன் கோவிலைச் சேர்ந்த சங்கரன் கண் மருத்துவமனை விருதுநகர் ரோட்டரி சங்கம், விருதுநகர் இதயம் ரோட்டரி சங்கம் மற்றும் விருதுநகர் ரோட்ராக்ட் சங்கம் இணைந்து நடத்திய கண் தான விழிப்புணர்வு பேரணியை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் கொடி உடைத்து துவங்கி வைத்தார். இந்தப் பேரணியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள்,ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு , கண் தானம் உங்கள் குடும்ப பாரம்பரியமாக இருக்கட்டும்,உங்கள் கண்களை மண்ணில் புதைக்காதீர்கள் மற்றவர்களுக்கு விதைத்திடுங்கள், கண்தானம் செய்து காலமெல்லாம் வாழ்வீர்,கண்புரை நோய்களை சுலபமாக குறைக்கலாம் பயம் வேண்டாம்,கண் அழுத்த நோயால்ஏற்படும் இழப்பை தவிர்க்க முடியும்,உங்கள் கண்களை காப்பாற்றுங்கள் மற்றும் உலகைப் பாருங்கள், ஒருவர் செய்யும் கண்தானம் நால்வருக்கு ஒளி தானங்களில் சிறந்தது கண்தானம் ,இயன்றவரை ரத்ததானம் இறந்தபின் கண்தானம், நாம் மறைந்தாலும் நம் விழிகள் பார்க்கும், உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி இந்த பேரணியில் கலந்து கொண்டனர் இந்தப் பேரணியானது விருதுநகர் எம்ஜிஆர் சிலை அருகில் ஆரம்பித்து நகராட்சி அலுவலகம், தெப்பம், மெயின் பஜார், மாரியம்மன் கோவில், வழியாக சென்று கார்னேசன் சந்திப்ப்பு அருகில் உள்ள அரசு உதவி பெறும் ஒரு நிலைப் பள்ளி முன்பு முடிவடைந்தது

Similar News