சூலூரில் அரிய வகை பச்சோந்தி – வனத்துறையிடம் ஒப்படைப்பு
அடர்ந்த காடுகளில் வாழும் அரிய பச்சோந்தி – குடியிருப்பு பகுதியில் கண்டெடுப்பு .;
கோவை மாவட்டம் சூலூர் அருகே ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள வீட்டில், அடர்ந்த காடுகளில் மட்டுமே காணப்படும் அரிய வகை பச்சோந்தி ஒன்று தென்பட்டது. குளிர் ரத்தப் பிராணியான இவை நிறம் மாற்றும் திறனும், 360 டிகிரி கண் சுழற்சி திறனும் கொண்டவை. வீட்டில் பச்சோந்தியை கண்ட வீட்டு உரிமையாளர் வீரா, பாம்பு பிடி வீரர் அஜித்குமாரை அழைத்தார். அவர் பாதுகாப்பாகப் பிடித்து, மதுக்கரை வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். குடியிருப்பு பகுதியில் அரிய பச்சோந்தி வந்தது அப்பகுதி மக்களில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.