மருதமலை சாலையில் ஒற்றைக் காட்டு யானை பரபரப்பு !

வனத்துறையினர் கூச்சலிட்டு விரட்டிய காட்டு யானை – அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.;

Update: 2025-09-09 09:08 GMT
கோவை மருதமலை – பாரதியார் பல்கலைக்கழக சாலையில் நேற்றிரவு ஒற்றைக் காட்டு யானை ஒன்று சாலையில் நடந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் ரோந்து வாகனத்தில் விரைந்து சென்று, “ரைட்ல போ… வடக்கு போ சாமியே…” எனக் கூச்சலிட்டு விளக்குகள் போட்டு விரட்டினர். பின்னர் யானை வனப்பகுதிக்குள் சென்றது. சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், எந்த அசம்பாவித சேதமும் ஏற்படவில்லை. மருதமலை சுற்றுப்புறங்களில் அடிக்கடி காட்டு யானைகள் வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Similar News