டாஸ்மாக் தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் !

பணி நிரந்தரம், மருத்துவ வசதி வழங்கக் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.;

Update: 2025-09-09 09:14 GMT
டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு நிரந்தர பணி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டுதோறும் 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்காததும், ESI மருத்துவத் திட்டம் அமல்படுத்தாததும் கண்டனம் எழுப்பப்பட்டது. மேலும், EPFO குறைபாடுகள், POS டிஜிட்டல் இலக்கு முறையின் சிக்கல்கள், சிகிச்சை செலவு திரும்பப்பெறுவதில் தாமதம் ஆகியவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். காலி பாட்டில் திட்டம் குறித்து ஊழியர்களை பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்தனர். அதேவேளை, தனியார் மனமகிழ் மன்றங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டதை கடுமையாக எதிர்த்த தொழிலாளர்கள், மது விற்பனையை அரசு மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Similar News