கார் மோதியதில் டூவீலரில் சென்றவர் பலி

மதுரை திருமங்கலம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலியானார்;

Update: 2025-09-09 11:51 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூர் முனியாண்டி கோவில் தெருவில் வசிக்கும் அழகிரி மகன் குமரேசன் ( 50) என்பவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் விருதுநகர் திண்டுக்கல் நான்கு வழி சாலையில் தருமத்துப்பட்டி சந்திப்பில் சாலையை கடக்க முயற்சித்த போது சிவகாசியைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் ஒட்டி வந்த கார் இவர் மீது மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை திருமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.இது குறித்து அவரது மனைவி வீரம்மாள் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News