நெல்லை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பெய்த மழை

மழை;

Update: 2025-09-09 12:48 GMT
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் செவ்வாய்க்கிழமை காலை வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் டவுன், பேட்டை, கல்லூர், சிங்கம்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டாவது நாளாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக காலையில் வெயில் வெளுத்து வாங்கி வரும் வெப்பத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து வரும் நிலையில் மாலை மழை பெய்வதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News