கோவை கோர்ட்டில் சவுக்கு சங்கர் ஆஜர் !
பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு.;
பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை நேற்று கோவை 4-வது ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற இருந்தது. ஆனால் வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டம் நடத்தியதால் விசாரணை நடைபெறவில்லை. நீதிபதி அருண்குமார், வழக்கை செப்டம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.